திருவள்ளூர் மாவட்டத்தில், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர், மதுரவாயல் உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள், மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் ஸ்ரீராம் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அறையின் சிசிடிவி கேமிராவில் பழுது:திமுகவினர் அதிர்ச்சி! - கண்காணிப்புக் கேமரா
திருவள்ளுர்: வாக்கு இயந்திரம் வைத்துள்ள பாதுகாப்பு அறையின் கண்காணிப்புக் கேமிராவில் ஒரு மணி நேரம் பழுது ஏற்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்,
இன்று (ஏப்.22) அதிகாலை 3 மணியளவில் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் திடீரென பழுது ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாகச் சென்று புகார் அளித்ததன் பேரில் கேமரா பழுது ஒரு மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது,
இந்த மையத்தில் வாக்கு இயந்திரம் வைத்த நாள் முதல் பல்வேறு பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக திமுகவினர் ஏற்கனவே தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது கேராமாவில் பழுது ஏற்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.