திருச்சி மாவட்டம், நவலுாா் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (62), இவரது மனைவி சின்னபொண்ணு (61). இவர்கள் இருவரும் நேற்று (செப்.21) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அப்போது, இவர்கள் இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு விரைந்து வந்து மூத்த தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து அந்த மூத்த தம்பதி கூறியதாவது, " திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம், கோனார் தெருவில் வசித்து வரும் தனது மகன் முருகன், தங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு, தாங்கள் வசித்த வீட்டையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகத்" தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து, தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.