நாமக்கல்லில் இருந்து கேரள மாநிலம் புனல்வேலிக்கு லாரியில் ஓட்டுநர் தங்கராஜ் என்பவர் முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பாலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரி கவிழ்ந்து விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதம்! - முட்டை லாரி விபத்து
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதமாகின.
EGG Lorry Accident In Srivilliputtur
இதில், ஓட்டுநர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைuல் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், லாரியில் ஏற்றி வந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதமடைந்தன.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.