கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாகவும் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தற்போது சில தனியார் பள்ளிகளில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் முறையாக இல்லாமல் இருப்பதால் மாணவர்களின் மதிப்பெண்ணை அதிகப்படுத்தி பள்ளிகளின் மேம்படுத்துவதற்காக முயற்சிகளை தனியார் பள்ளிகள் எடுத்து வருகின்றன.
இதற்காக மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து கட்டாயமாக தேர்வு எழுத வைக்கும் நடைமுறைகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்து வருகிறது.