விழுப்புரம் அருகே உள்ள அரியலூர் திருக்கை பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு - 35 year old young man killed by Corona
விழுப்புரம்: அரியலூர் திருக்கை பகுதியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய இவருக்கு, கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி இவரது உடலை அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் விழுப்புரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.