கரோனா தொற்று காரணமாக இணைய வர்த்தகம் அதிகரித்திருக்கும் நிலையில், மளிகைக் கடைகள், காய்கறி விற்கும் கடைகள், மருந்தகங்கள், ஸ்டேஷனரி கடைகள், சிறிய உணவகங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள், தங்களது வணிகத்தை இணைய வழியில் தொடர டியூநவ் (duNOW) என்ற செயலி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிக முதலீடு தேவை என்பதால், சிறு வியாபாரிகள் இணைய வர்த்தகத்தை நாடாத நிலையில், நாள் ஒன்றுக்கு 14 ரூபாய் செலவாகும் வகையில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறு கடைகளின் வியாபார வளர்ச்சிக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தச் செயலியில், விநியோகம், இருப்புப் பட்டியல், பணப்பரிவர்த்தனை (ஜிஎஸ்டி உடன்), கடன் மேலாண்மை, தகவல் பரிமாற்றம் போன்ற ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.