தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தரமற்ற விதையால் விளைந்த கரோனா தக்காளி - விற்பனையாகாமல் விவசாயி தவிப்பு - Tomato farmer

கிருஷ்ணகிரி : தரமற்ற விதையால் வித்தியாசமான வடிவங்களில் விளைந்த தக்காளிகளை விற்க முடியாமல் விவசாயி ஒருவர் தவித்து வருகிறார்.

தரமற்ற விதையால் விளைந்த கரோனா தக்காளி - விற்க முடியாமல் விவசாயி தவிப்பு
தரமற்ற விதையால் விளைந்த கரோனா தக்காளி - விற்க முடியாமல் விவசாயி தவிப்பு

By

Published : Jul 4, 2020, 3:03 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜப்பா(50) என்பவர் ஐந்து ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி செடிகளை மூன்று மாதங்களாக பராமரித்ததன் விளைவாக செடிகள் வளர்ந்து உள்ளன.

ஆனால், தாக்காளிகளோ வழக்கத்திற்கு மாறான உருவத்தில் விளைந்து வருகின்றன. முதல் அறுவடையிலேயே தக்காளிகள் பூனை மூஞ்சு தக்காளிகளை போல இருப்பதால் அதிர்ச்சியடைந்த விவசாயி ராஜப்பா, தோட்டக்கலைத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தக்காளி பயிரிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் வந்து செடிகளை பார்வையிட்ட அவர்கள், பரிசோதனை செய்ததில் காலாவதியான தரமற்ற தக்காளி விதைகளை பயன்படுத்தியதே குறைபாடுடன் தக்காளிகள் விளைவதற்கான காரணமென கூறினர்.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய விவசாயி ராஜப்பா கூறுகையில், "எனது தோட்ட தக்காளியை பார்த்து கரோனா தக்காளி என பலரும் கிண்டல் செய்வது மனதை கஷ்டப்படுத்துகிறது. பெரும்பாலான பூக்கள் கனி தருவதற்கு முன்னதாக தானே உதிர்கிறது. இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு நஷ்டமடைந்தபோதும் தக்காளி செடிகளை அழிக்காமல் லாபம் கிடைக்க ஏதாவது வழி உண்டா என தேடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த அறுவடைக்குள் தக்காளிகள் வழக்கமான உருவத்துடன் விளைவிக்க கூடுதலாக செலவிட்டு பராமரித்து வருகிறேன்.

நல்ல முறையில் தக்காளி விளைந்திருந்தால் தினம்தோறும் 4000 கிலோ வரை அறுவடை செய்திருக்க முடியும். இதனால் 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். ஊரடங்கு அதைத் தொடர்ந்து கடன் வாங்கி செலவு செய்தும் தற்போது நஷ்டப்பட்டு நிற்கின்ற என்னுடைய இழப்பை ஈடுகட்டும் விதமாக அரசு நிவாரணம் வழங்கினால் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவிடுவேன்" என்றார்.

கரோனா ஊரடங்கு காரணமாக தக்காளி விலை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக 20 கிலோ எடைக்கொண்ட தக்காளி கூடை 1000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details