தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குமரிக்கு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சூடுபிடித்த சாலைப் பணிகள்! - Cm edappadi palaniswami

நாகர்கோவில்: குமரிக்கு வரும் 22ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி வருகையை முன்னிட்டு ஆட்சியர் அலுவலக வளாகம் புதிதுபடுத்தப்படுவதோடு பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

Road works
Road works

By

Published : Sep 16, 2020, 4:42 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை தோண்டும் பணி நடைபெற்றுவந்தது. பல இடங்களில் பணி நிறைவுபெற்றாலும் சாக்கடைகள் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாமல் அப்படியே போடப்பட்டிருந்தன.

இதனால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டும், வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியும் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பயனும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் வரும் 22ஆம் தேதி இரவு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி வருகிறார். அந்நாளில், மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். இதனால் குமரியில் பல்வேறு நடவடிக்கைகள் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் சீரமைக்கப்படாத பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் அவசரகதியில் சீரமைக்கப்படுகின்றன. முழுமையாக பள்ளங்களை நிரப்பாமல் மேலோட்டமாக பள்ளங்களை நிரப்பி சாலைகளை அதன் மேல் எழுப்பிவருகின்றனர்.

அதேபோல நாகர்கோவில் பகுதியில் உள்ள அனைத்து பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளையும் சீர் அமைக்காமல் முதலமைச்சர் செல்லும் பாதையில் உள்ள பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மட்டுமே சீரமைத்துவருகின்றனர். இதனால் மற்ற பகுதியில் சாலையில் பள்ளம் காணப்படுகிறது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படும் அதே வேளையில் அவர் செல்லும் பாதையில் உள்ள காலையில் மட்டும் சீரமைப்பதோடு மற்ற பகுதி சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details