தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாடம் கற்காமல் அலட்சியமாக நடப்பதா? பழனிசாமி அரசுக்கு டிடிவி கேள்வி - டிடிவி தினகரன்

சென்னை: இவ்வளவுக்குப் பிறகும் பாடம் கற்காமல் பழனிசாமி அரசு இப்படி அலட்சியமாக நடந்து கொள்வது கவலை தருகிறது. 'உதவித்தொகை தருகிறேன்' என்கிற பெயரில் கரோனாவை இன்னும் வேகமாக பரப்புவதை நிறுத்திவிட்டு, வீடுகளுக்கே சென்று நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

Corona spreads in the name of scholarship - TTV Dinakaran
Corona spreads in the name of scholarship - TTV Dinakaran

By

Published : Jun 23, 2020, 9:57 AM IST

கரோனா ஊரங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையை மாநில அரசு வீடுகளுக்கு சென்று வழங்கவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ட்விட்டர் பதிவில், “சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்காமல், அங்கங்கே கூட்டம் சேர்த்து, மக்களை வரிசையில் நிற்கவைத்து அளித்து வருவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவ்வளவுக்கு பிறகும் பாடம் கற்காமல் பழனிசாமி அரசு இப்படி அலட்சியமாக நடந்து கொள்வது கவலை தருகிறது.

'உதவித்தொகை தருகிறேன்' என்கிற பெயரில் கரோனாவை இன்னும் வேகமாக பரப்புவதை நிறுத்திவிட்டு, வீடுகளுக்கே சென்று நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details