கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 78 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமத்தம்பட்டி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
புதிய காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் - காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர்
கோவை: 78 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கருமத்தம்பட்டி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோரால் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், குடியிருப்பு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் அனிதா, துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம், சூலூர் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.