தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்கள் - ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி உதவி - Ramanathapuram MP Nawasani assisted

ராமநாதபுரம்: கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி நிவாரண உதவி வழங்கினார்.

Ramanathapuram MP Nawasani assisted
Ramanathapuram MP Nawasani assisted

By

Published : Jun 25, 2020, 1:02 AM IST

மீன்பிடித்தடைக்காலம் முடிந்த பிறகு ஜூன் 13ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மலர் வண்ணன், ரெஜின்பாஸ்கர், ஆஸ்டின் சுஜிந்திரன், ஜேசு என நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை அலுவலர்களிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர்.

தொடர்ந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் , நாட்டுப்படகுகள் மூலம் கடலில் தொடர்ந்து தேடி, ஜூன் 16-அன்று மீனவர் ஜேசுவை உயிருடன் மீட்டனர். ஆனால், ஜூன் 19 வெள்ளிக்கிழமை மாலை ரெஜின் பாஸ்கர், ஜூன் 20 சனிக்கிழமை ஆஸ்டின் சுஜிந்திரர், ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை மலர் வண்ணன் ஆகியோர் சடலமாக மட்டுமே மீனவர்களால் மீட்க முடிந்தது.

இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை ராமேஸ்வரத்தில் சந்தித்த ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ்கனி, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 25 ஆயிரம் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details