நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், வேலூர் மற்றும் பரமத்தி காவல் நிலைய எல்லைக்குள் கரோனா அதிகம் பாதித்த 35 தெருக்கள் கட்டுபாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் மக்கள் நடமாட்டம் ட்ரோன் மூலம் கண்காணிப்பு - நாமக்கல் மாவட்ட செய்திகள்
நாமக்கல்: கரோனா அதிகம் பாதித்த 35 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வருவதை ட்ரோன் மூலம் கண்காணித்து விதிகளை மீறிய 10 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளை காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது வீடுகளை விட்டு வெளியில் சுற்றி திரிந்த 10 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் கேட்டபோது, கரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் தொற்று பரவுதல் தடுத்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் எனவும், தினசரி கட்டுப்பாடு மண்டல பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி தொடரும் என்றும் தெரிவித்தார்.