தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குமரியில் ஓட்டுநர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! - கன்னியாகுமரி அகில இந்திய மக்கள் நல கழகம்

கன்னியாகுமரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Driving unions demonstrated various demands in kanniyakumari
Driving unions demonstrated various demands in kanniyakumari

By

Published : Aug 20, 2020, 6:32 PM IST

கன்னியாகுமரி மாவட்ட அகில இந்திய மக்கள் நல கழகம், தோழர் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்கம், உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் என மூன்று தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "கரோனா காலகட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும், ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சாலை வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் வாகன தவணைக்கு விதிக்கப்பட்ட வட்டி மற்றும் அபராதத் தொகையை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் பேட்ஜ் லைசென்ஸ் பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். காலாவதியான வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை புதுபிப்பதற்கு முழு ஊரடங்கு தளர்வு வரை அவகாசம் வழங்க வேண்டும்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details