திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட பயிற்சி ஓட்டுநர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 500 பயிற்சி பள்ளிகளிலும் சேர்த்து சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு! - Lockdown
திருப்பூர்: ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Driving School Association Pettion
ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைவரது வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ளதாகவும் ஏற்கனவே விண்ணப்பித்து இருக்கும் நபர்களுக்கும், புதிய நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அரசு கூறியுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றி பயிற்சி ஓட்டுநர் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று மனு அளித்தனர்.