திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நுழைவாயில் அருகில் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: ஓட்டுநர்கள் கோரிக்கை! - நிவாரணம் வேண்டி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை: கரோனா நிவாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஓட்டுனர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: ஓட்டுநர்கள் கோரிக்கை! ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: ஓட்டுநர்கள் கோரிக்கை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:29:19:1594907959-tn-tvm-03-drivers-protest-vis-7203277-16072020160811-1607f-1594895891-109.jpg)
குறிப்பாக கரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு கரோனா நிவாரணமாக 15ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அனைத்து ஓட்டுநர்களுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும், ஓட்டுநர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 100 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அனைத்து ஓட்டுநர்கள் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஓட்டுநர்கள் மீதும் 144 தடை உத்தரவை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.