தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சையில் திகவினர் போராட்டம்!

தஞ்சாவூர் : கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சையில் பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் தி.கவினர் போராட்டம்!
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் தி.கவினர் போராட்டம்!

By

Published : Jul 18, 2020, 1:12 AM IST

கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை காந்திஜி சாலை அண்ணா சாலை சந்திப்பில் உள்ள பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details