தஞ்சை காவிரி ஆற்றிலிருந்து பிரியும் ஏ பிரிவு வாய்க்கால்களான 1,156 ஏக்கர் பாசன வசதி கொண்ட அசூர் வாய்க்கால், 513 பாசன வசதி கொண்ட சர்வமாணிய கொட்டையூர் வாய்க்கால், 500 ஏக்கர் பாசன வசதி கொண்ட ஏராகரம் வாய்க்கால் ஆகியவற்றில் 30 ஆண்டு காலமாக கவனிப்பாரற்று இருப்பவைகளை தூர் வாரிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
30 வருடமாக சுத்தம் செய்யப்படாத வாய்க்கால் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர்: 30 வருடமாக செயல்படாத வாய்க்கால்களை சுத்தம் செய்யச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் , பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் மாரியப்பன், கோட்டாட்சியர் கமலக்கண்ணன், வட்டாட்சியர் நகராட்சி அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, மேற்படி மூன்று ஏ பிரிவு வாய்க்கால்களையும் தலைப்பு முதல் உரிய முறையில் நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ஆற்றின் முகப்பிலிருந்து தூர்வாரி, 2200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்