மும்பை:பதஞ்சலி நிறுவனத்தின் 'கரோனில்' கோவிட்-19 நோயை குணப்படுத்தும் மருந்து கிடையாது என்றும் அவ்வாறு கூறி அதனை விளம்பரம் செய்தாலோ, விற்பனை செய்தாலோ தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்துகள் துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே.
கரோனில் தயாரிப்பாளர்களால் ஏதேனும் தவறான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டால், 1954ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் மேஜிக் வைத்தியம் (ஆட்சேபிக்கக்கூடிய விளம்பரங்கள்) சட்டம் மூலம் மாநில உள்துறை துறையின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் மருந்துகள் துறை அமைச்சர் தெரிவித்தார்.