2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரியாவின் டாமினிக் தியமை எதிர்கொண்டார்.
டென்னிஸ்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி - Dominic Thiem
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
![டென்னிஸ்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3246785-67-3246785-1557513499689.jpg)
டென்னிஸ்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி
இதில், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்ற ஃபெடரர், இரண்டாவது செட்டை 6-7 என்ற கணக்கில் டாமினிக்கிடம் போராடி தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் டாமினிக்கின் அசத்தலான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஃபெடரர் 4-6 என்ற கணக்கில் வீழ்ச்சி அடைந்தார். இதன் மூலம் ஃபெடரர் இப்போட்டியில் 6-3, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.