தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாட்டு வெடிகுண்டு வெடித்து நாய் உயிரிழப்பு- காவலர்கள் சோதனை! - Local bomb blast

நாட்டு வெடிவெடித்து வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை, காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Forest department officials
Forevst department officials

By

Published : Jul 2, 2021, 6:30 AM IST

கோயம்புத்தூர் : பூச்சியூர் அருகேயுள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில், காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து நேற்று முன்தினம் (ஜூன் 30) வளர்ப்பு நாய் ஒன்று உயிரிழந்தது.

இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காரமடை வனச்சரகர் மனோகரன், காரமடை காவல் ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கட்டாஞ்சி கரடு, திம்மம்பாளையம் பகுதியில் நேற்று (ஜுலை 1) சோதனை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதி மக்களிடையே அவுட்டுகாய் தயாரிக்கக்கூடாது என அறிவுறுத்திய அவர்கள் அவ்வாறு தயாரித்தால் வனத்துறை, காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details