தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வேண்டுமென்றே வைரசை பரப்பினார்களா? - ரைசா - அண்மை சினிமா செய்திகள்

கரோனா வைரஸ் தொற்றை யாராவது வேண்டுமென்றே பரப்பினார்களா? என்று நடிகை ரைசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Raiza
Raiza

By

Published : Jun 14, 2020, 10:00 AM IST

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரைப்பட பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் திரைப் பிரபலங்கள் தினம்தோறும் தாங்கள் செய்யும் வேலைகள் குறித்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில நடிகர், நடிகைகளோ படப்பிடிப்புக்கு செல்ல முடியாத வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை ரைசா கரோனா வைரஸ் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "நான் தற்போது மீண்டும் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால் அது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கரோனா என்றால் என்ன? வைரஸ் இங்கு இயல்பாக வந்திருக்கிறதா, இல்லை யாரோ வேண்டுமென்றே வைரஸ் தொற்றை பரப்பினார்களா? அதைப்பற்றி நாம் அனைத்தும் கற்றுக் கொண்டோமா?, இதிலிருந்து நாம் மீண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ? என குறிப்பிட்டுள்ளார்.

ரைசா பதிவு

ABOUT THE AUTHOR

...view details