தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் தின வாழ்த்து - மருத்துவர் தின வாழ்த்து செய்தி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

மருத்துவர் தின நல்வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மருத்துவர் தின நல்வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Jul 1, 2020, 2:43 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உயிர் காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கரோனா தொற்று பரவாமல் காத்திட இந்நாளில் நாடு முழுவதும் அயராது பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் பணியினை நாடே போற்றிக் கொண்டிருக்கிறது. நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் நம்முடைய மருத்துவர்கள். இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடனும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை. மருத்துவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு, மகத்தான பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு எப்போதுமே துணை நிற்கும். மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details