தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அன்புமணியின் விழிப்புணர்வு காணொலி - திரைப்பட இயக்குநர்கள் பாராட்டு! - அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு காணொலி - இயக்குநர்கள் பாராட்டு

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கரோனாவும் காலநிலை மாற்றமும் என்ற காணொலியைக் கண்ட திரைப்பட இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர்.

Anbumani Ramadoss Awareness Video
Anbumani Ramadoss Awareness Video

By

Published : Jun 8, 2020, 11:17 PM IST

உலக சுற்றுச்சூழல் நாள், அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்திய தாக்குதல்கள், இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனித குலத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும் என்றும் கூறி, 'கரோனாவும் காலநிலை மாற்றமும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொலியைப் பார்த்த பிரபல இயக்குநரான தங்கர்பச்சான், "பூமி எதிர்கொள்ளும் உடனடியான சிக்கலை, இந்தக்காணொலி நமக்கு தெளிவுபடுத்துகிறது. கட்டாயம் ஒரு முறை இதைக்காணுங்கள். நீங்கள் உயிர் வாழ்வதற்காகவாவது" என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பார்த்திபன், ' "கரோனாவும் காலநிலை மாற்றமும்'' என்ற தலைப்பில் வெளியான அன்புமணி இராமதாஸின் விழிப்புணர்வு காணொலியைப் பாருங்கள்' என்று கூறினார்.

இயக்குநர் பொன்ராம், "கவனிக்க வேண்டிய பதிவு. அன்புமணி ராமதாஸ் காலநிலை மாற்றத்தைப் பற்றி அற்புதமாக கூறுகிறார்" என்றார்.

இயக்குநர் சமுத்திரகனி, "இயற்கையைப் பாதுகாப்போம்... நம்மை பாதுகாத்துக் கொள்வோம், விழித்தெழு என்று", இக்காணொலியைப் பாராட்டி, பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி, "பூமியின் அதிக வெப்பத்தால் புயல், வெள்ளம், கிருமிகளின் வருகையென விஞ்ஞானப் பூர்வமாக அன்புமணியின் கரோனாவும் கால நிலை மாற்றமும் எனும் விழிப்புணர்வு காணொலி பேசுகிறது. முதலில் இதற்கு நன்றிகள். பாராட்டுகள்" எனக் கூறினார்.

இதேபோல், ஏராளமான முன்னணி இயக்குநர்கள், தன்னார்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details