தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், திமுக கழகத் தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்குக் கரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் திமுக கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
கரோனா பாதிப்பு: விருதுநகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய திமுக எம்எல்ஏ! - KABASARA KUDI NEER
விருதுநகர்: திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
![கரோனா பாதிப்பு: விருதுநகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய திமுக எம்எல்ஏ! KABASARA KUDI NEER to people](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:56:43:1619170003-tn-vnr-03-dmk-mla-kabasarakudineer-prouide-public-23042021120343-2304f-1619159623-665.jpg)
அதன் வரிசையில், விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே பொதுமக்களுக்குக் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கினார்.
இந்நிகழ்சியை பொதுக்குழு உறுப்பினர் கோதண்டராமன் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இந்நிகழ்சியில் நகர செயலாளர் S.R.S. தனபாலன், பொருளாளர் நேசனல் ராமர், அவைத் தலைவர் காசிராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் கிருஷ்ணகுமார், வர்த்தக அணி ரெங்கராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.