உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கிறது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 2,645 பேர் பாதிக்கப்பட்டும், 42 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதன் பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை மீறி திமுக பொதுக்குழு உறுப்பினரும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவருமான குணசேகர், 100 பேருடன் சேர்ந்து தனது 50ஆவது பிறந்தநாளை குத்தாட்டத்துடன் கொண்டாடினார்.