சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். அப்போது கரோனா தொற்று பரிசோதனை செய்ததில், நோய் தொற்று உறுதி செய்யபட்டது. இதனையடுத்து மூச்சு திணறல் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் 80 விழுக்காடு செயற்கை சுவாசம் அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று (ஜூன்.5) உடல் நலம் சற்று முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எம்எல்ஏ ஜெ.அன்பழகனை நலம் விசாரிக்க வந்த திமுக தலைவர்! - inquire about MLA J.Anbalagan health condition
சென்னை: திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகனை நலம் விசாரிக்க திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன்.5) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஜெ அன்பழகன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். தற்போது அளிக்கப்பட்ட சிகிச்சையில் செயற்கை சுவாசம் தருவது 40 விழுக்காடாக குறைந்துள்ளது.
தொடர்ந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் இணையதளங்களில் பரவும் வதங்திகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவர் கூறினார். இதையடுத்து, இன்று (ஜூன் 6) அவரது உடல் நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் மருத்துவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.