தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்த தலைவர் தந்தை பெரியார் - மு.க.ஸ்டாலின்! - திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம்

சென்னை : எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கும் தன் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்லி மாற்றுக் கருத்துகளையும் மதித்து பதிலளித்து, சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்த தலைவர் தந்தை பெரியார் - மு.க.ஸ்டாலின்!
dmk-leader-mk-stalin-condemns-insult-to-periyar-statue.

By

Published : Jul 17, 2020, 5:27 PM IST

கோவை மாவட்டத்தை அடுத்துள்ள சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீசப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை இந்த செய்தி காட்டுத்தீயாக சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து கோவையில் உள்ள திக, திவிக, தபெதிக, திமுக, பாமக, மதிமுக, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் இயக்கத்தினர் பெரியார் சிலைக்கு அருகில் ஒன்றுக் கூடி, காவிச் சாயம் பூசிய சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

தகவலறிந்து விரைந்துவந்த காவல்துறையினர், அவர்களை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினர்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்

இன்று காலை பெய்த மழையால் பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவிச் சாயம் அகன்றது. மீதமிருந்த காவிச் சாயத்தை கூடியிருந்த தொண்டர்கள் சுத்தப்படுத்தினர்.

இது குறித்து திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார். சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!" என கூறியுள்ளார்.

கோவையில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசப்பட்டதற்கு பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொது செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details