தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மருத்துவ தேவைக்காக நாகை செல்ல அனுமதிக்க வேண்டும்- திமுக கோரிக்கை! - திமுகவினர் மனு

நாகப்பட்டினம்: மருத்துவ தேவைகளுக்கு காரைக்கால் வழியாக நாகப்பட்டினத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

முதலைச்சரிடம் திமுக மனு

By

Published : Jul 2, 2020, 4:51 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை காரைக்கால் செல்லும் வழியில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு ராஜீவ்புரத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு வழக்கம்போல் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது முதலமைச்சர் நாராயணசாமியிடம் தரங்கம்பாடி பேரூர் திமுக நகர செயலாளர் வெற்றிவேல் மற்றும் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நோயாளிகள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கும், நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர அலுவலர்களுக்கும் செல்ல நண்டலாறு சோதனைச்சாவடியில் காரைக்கால் காவல் துறையினர் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கின்றனர்.

இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கு காரைக்கால் மற்றும் காரைக்கால் எல்லையை தாண்டி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details