திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளுக்கு 14ஆவது நிதிக் குழுவில் ஒதுக்கப்பட்ட மானிய தொகைக்கான பணிகளை செய்யவிடாமல் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா தடுப்பதாக கூறி திமுக ஊராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிடம் புகார் மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் ஆட்சியர் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கரோனா தொற்று பரவாமல் தடுக்க தகுந்த இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வரும் இந்த நேரத்தில் இதுபோன்று கூட்டமாக எந்த இடத்திலும் கூடக்கூடாது.