மின் கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழில் பேசக்கூடாது என்று சொல்லிய மத்திய அரசு அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகத்தினரைக் கண்டித்து, குன்னூர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழில் பேச தடை விதித்த வெடிமருந்து தொழிற்சாலை திமுக கண்டனம் - Central government
நீலகிரி: தமிழில் பேச தடை விதித்த மத்திய அரசின் வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து, குன்னூர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள் பங்கேற்று, தமிழ் பேசுவதற்கு தடை விதித்த மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.