இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "செப்டம்பர் 2ஆம் தேதியன்று தினமலர் நாளிதழில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிகவை பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளிவந்தது. இந்த செய்தியினால் பொதுமக்களிடையே நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரும் தேமுதிக! - DMDK seeks legal action against Dinamalar
சென்னை : தேமுதிகவை பற்றி தொடர்ந்து அவதூறான செய்தியை வெளியிட்டு வரும் தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் தொகுதி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
![தினமலர் ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரும் தேமுதிக! தினமலர் ஆசிரியர் ராமசுப்பு மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரும் தேமுதிக!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:01:28:1599215488-tn-che-04-dmdkcomplaint-script-7202290-04092020150139-0409f-1599211899-630.jpg)
தினமலர் ஆசிரியர் ராமசுப்பு மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரும் தேமுதிக!
இதேபோல, தொடர்ந்து தினமலர் பத்திரிகை தேமுதிகவை பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்தியை வெளியிட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்தி, அவதூறு பரப்பிய தினமலர் நாளிதழ் ஆசிரியர் ராமசுப்பு, கார்டூனிஸ்ட் கருணா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளோம்.
காவல்துறையினர், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மத்திய சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேமுதிக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.