தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஏரிகள் புனரமைப்பு குடிமராமத்து பணிகள் ஆய்வு - inspection-of-lake-renovation-works

திருவண்ணாமலை: மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டத்தில் ரூ.79 லட்சத்தில் நடைபெறும் ஏரிகள் புனரமைக்கப்படும் குடிமராமத்து பணிகளை வடிநில கோட்ட செயற்பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் ஏரிகள் புனரமைக்கப்படும் குடிமராமத்து பணிகள் ஆய்வு
ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் ஏரிகள் புனரமைக்கப்படும் குடிமராமத்து பணிகள் ஆய்வு

By

Published : Jun 6, 2020, 10:40 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள வேடந்தவாடி ஏரியை புனரமைக்க ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார அமைப்பைச் சார்ந்த ஏரிகளில் அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் குடிமராமத்து பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், வைப்பூர் ஏரி, கீழ்பென்னாத்தூர் பெரிய ஏரி, வேடந்தவாடி ஏரி ஆகிய மூன்று ஏரிகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து உதவி பொறியாளர் செல்வகுமாரி கூறுகையில், "இத்திட்டத்தின் மூலம் வேடந்தவாடி ஏரியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மதகுகள் புதுப்பித்தல், மூன்று கலிங்கல் புதுப்பித்தல், ஏரிக் கரையை பலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வரத்து கால்வாய்கள் சரி செய்தல், ஏரியின் எல்லைகளை அளந்து எல்லைகளை அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், 67.88 ஹெக்டேர் விலை நிலங்கள் பயன்பெறும்" எனத் தெரிவித்தார்.

மேலும் வேடந்தவாடி ஏரிக்கு பாசன சங்கம் அமைக்கப்பட்டு, ஏரியின் மொத்த ஆயக்கட்டுதாரர்கள் 110 பேர், பாசன சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 85 பேர் உள்ளனர். இந்த பாசன சங்கத்தின் வாயிலாக நியமன முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்...!

ABOUT THE AUTHOR

...view details