தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசு விடுதிகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி

தேனி: பொதுத்தேர்வு எழுதவுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ - மாணவியர்களுக்கான அரசு விடுதிகள் வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

பொதுத்தேர்வுகள் துவக்கம் - அரசு விடுதிகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி.
பொதுத்தேர்வுகள் துவக்கம் - அரசு விடுதிகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி.

By

Published : Jun 7, 2020, 6:56 AM IST

கரோனா நோய் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து வருகின்ற ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், 11-ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வு 16 ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு வருகின்ற 18ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ - மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக அரசு விடுதிகள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயின்று வந்த மாணவர்களின் வசதிக்காக வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் அந்தந்த விடுதிகள் திறக்கப்பட உள்ளது.

இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள், ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவ மாணவியர்கள் அனைவரும் பயனடைவார்கள்.

மாணவ - மாணவியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேளையும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக பராமரிக்கவும், மாணவர்களின் உடல் வெப்பநிலையை முறையாக பரிசோதிக்கவும், மாணவர்கள் அடிக்கடி கை கழுவுவதற்கும், முகக்கவசம் அணிவதற்கும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவ - மாணவியர்களுக்கு தனியான இட ஒதுக்கீடு செய்ய விடுதிக் காப்பாளர்கள் மூலம் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவ மாணவியர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வு எழுதி வெற்றி வேண்டும்” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details