தென்காசி மாவட்டத்தில் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு, கரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களின் இரத்த மாதிரிகள் நெல்லை மாவட்டத்திலுள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி, அதன் முடிவுகள் பெறப்பட்டு வந்தன.
தற்போது தென்காசி தலைமை மருத்துவமனையில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றை வேகமாக கட்டுப்படுத்த, இந்த மையமானது திறக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் கரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர்! - District Collector who opened the Corona Virus Testing Center in Tenkasi
தென்காசி: மாவட்ட தலைமை மருத்துவமனையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார்.
District Collector who opened the Corona Virus Testing Center in Tenkasi
இங்கு 24 மணி நேரமும் பரிசோதனை செய்யப்படும். மேலும் 6 பணியாளர்கள் பணி புரிய உள்ளதாகவும் ஒரு நாளுக்கு 300 பேருக்கும் மேல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.