தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பயிர்களை நாசமாக்கும் வெட்டுகிளிகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை! - பாலைவன வெட்டுகிளிகள்

திருவள்ளூர் : விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டு கிளிகளை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

By

Published : Jun 3, 2020, 3:02 AM IST

விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டு கிளிகளை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விஞ்ஞானிகள் வனத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “வெட்டுகிளிகள் விவகாரம் தொடர்பாக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து பயிர்களை துவம்சம் செய்யும் பாலைவன வெட்டுக்கிளிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் நுழைந்தால் அவற்றை எதிர்கொள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தலாம்.

ஆகவே மாவட்ட விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் ஏற்படுமாயின் அதனை உடனடியாக எதிர்கொள்ளும் பொருட்டு பரிந்துரைக்கப்பட்ட உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை ஆலோசித்து வயல்களில் டபரா கொண்டு ஒலியை எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மீது அமர்வதை தடுக்கலாம்.

விவசாயிகளின் வயல்களில் வெட்டுக்கிளிகளின் கூட்டங்கள் தென்பட்டால் முதல் சுற்றில் சுற்றுச்சூழலை பாதுகாத்து வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லியினை பயன்படுத்த வேண்டும். இந்த மருந்து அதிக திறன் வாய்ந்தது என்பதால் இதனை தெளிக்கும் போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஒரே நபர் தொடர்ந்து தெளிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது.

இதே போன்று தமிழ்நாட்டில் 250 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளன. இவை பூச்சிகள் மற்றும் புல்வகைகளை உண்டு நன்மை செய்யக் கூடியவை. இவற்றில் நீளக் காம்புடன் கூடிய வெட்டுக்கிளிகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்பதால் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என விவசாய பெருமக்கள் உள்ளூர் வெட்டுகிளிகளைக் கண்டு பாலைவன வெட்டுகிளிகள் என அச்சப்பட வேண்டாம்.

இருப்பினும் வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அல்லது வேளாண்மை அறிவியல் மையத்திற்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம்.

வெட்டுக்கிளிகளை புகைப்படம் எடுத்து அனுப்பியும் ஆலோசனை பெறலாம். மேலும், வெட்டுக்கிளி படங்களை உழவன் செயலி கண்காணிப்பு பிரிவில் பதிவேற்றம் செய்தும் ஆலோசனை பெறலாம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details