ஓசூர் மத்திகிரியில் புதியதாக நாட்டினகோழி இனப்பெருக்கின வளாகம் ரூ.6 கோடியே 74 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் வளரும் கோழியின கொட்டகைகள் இரண்டு, குஞ்சு பொறிக்கும் கொட்டகை ஒன்று, முட்டையிடும் கோழிக் கொட்டகைகள் மூன்று என மொத்தம் ஆறு கொட்டகைகளின் கட்டுமானப் பணிகள், கட்டப்பட்டு முடிக்கும் தருவாயில் உள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன் மூலம் வாரத்திற்கு 20,000 கோழிக் குஞ்சுகளை உருவாக்கி, அவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், இக்கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாட்டின கோழியின உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்கு வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின கோழிக்குஞ்சு பொறிக்கும் ஆய்வகம், அங்கு வளர்க்கப்பட்டு வரும் குதிரைகளின் கொட்டகைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர் அக்கொட்டகைகளின் மராமத்துப் பணிகளை ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து அதே வளாகத்தில் ரூ.1.6 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொலிகாளை கொட்டகை பணிகளையும் பார்வையிட்டு, இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.