தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறனாளி மாணவர்களை சிறப்பு பேருந்துகளில் அவர்களின் தேர்வு மைய ஊர்களுக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர்

By

Published : Jun 9, 2020, 4:18 AM IST

தேனி: வெளியூரில் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் இழந்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை சிறப்பு பேருந்துகளில் அவர்களின் தேர்வு மையம் இருக்கும் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களை சிறப்பு பேருந்துகளில் அவர்களின் தேர்வு மைய ஊர்களுக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர்

கரோனா நோய் பரவல் காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் விடுபட்ட 11ஆம் வகுப்பு தேர்வும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்வு மையங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் ஹால் டிக்கெட் வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதனைத் தொடர்ந்து வெளியூர் மாணவர்களும், அவர்கள் படித்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வெளியூரில் தங்கி 10, 11ஆம் வகுப்பு பயின்று வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை அவர்கள் தேர்வு எழுத உள்ள பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிவைத்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக அழைத்து வரப்பட்ட 10 மாணவ - மாணவியர்கள் அவர்களின் பெற்றோருடன் சென்னை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 3 சிறப்பு பேருந்துககளில் அனுப்பப்பட்டனர்.

முன்னதாக அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி மருந்து உள்ளிட்ட பொருள்களை வழங்கி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துகள் கூறி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கை அசைத்து வழியனுப்பி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details