திருப்பூர் மாவட்டத்தில், 120 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் நான்கு பேர் மட்டும் தற்பொழுது சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் - ராம்நகர் பகுதியில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான குழு, அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.