சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
‘காவல் துறையை பெருமைப்படுத்தும் படங்கள் எடுத்ததற்கு வருத்தப்படுகிறேன்’ - இயக்குநர் ஹரி - Latest cinema news
காவல் துறையை பெருமைப்படுத்தும் படங்கள் எடுத்ததற்கு வருத்தப்படுகிறேன் என இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.
![‘காவல் துறையை பெருமைப்படுத்தும் படங்கள் எடுத்ததற்கு வருத்தப்படுகிறேன்’ - இயக்குநர் ஹரி இயக்குநர் ஹரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-unnamed-2806newsroom-1593331497-220.jpg)
இயக்குநர் ஹரி
இந்நிலையில் இயக்குநர் ஹரி சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சாத்தான்குளம் சம்பவம் போல் ஒரு கொடூரம் இனி தமிழ்நாடு மக்களுக்கு நடக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.
காவல் துறையில் உள்ள ஒரு சிலரின் இந்த அத்துமீறல் அந்த தடையை ஏற்படுத்துகிறது. காவல் துறையை பெருமையோடு பேசிய ஐந்து படங்களை எடுத்ததற்கு இன்று நான் வருத்தப்படுகிறேன்"என்று தெரிவித்துள்ளார்.