ராமநாதபுரத்தில் அரசு மதுக்கடையில் இருந்து சட்டவிரோதமாக மது வகைகளை எடுத்து 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக மதுக்கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோட்டைசாமி, பூசைதுரை ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
கள்ளச்சந்தையில் சாராயம் விற்றவர்களை கரோனா பணிக்கு நிதி வழங்க உத்தரவிட்ட நீதிபதி! - Madurai court
மதுரை : டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுவை திருடி கள்ளச்சந்தையில் விற்ற இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் சாராயம் விற்றவர்களை கரோனா பணிக்கு நிதி வழங்க உத்தரவிட்ட நீதிபதி!
இவர்களில் கோட்டைசாமி இந்த வழக்கில் தனக்கு பிணை வழக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி வழங்கிய தீர்ப்பில், கோட்டைசாமி, பூசைதுரை ஆகிய இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்தவும், அந்த பணத்தை ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பில் ஈடுபடும் ஊழியர்களின் நலனுக்காக செலவழிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு கோட்டைசாமிக்கு முன்பிணை வழங்க உத்தரவிட்டார்.