திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள ராமபட்டினம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி, ரேகா தம்பதி. இந்தத் தம்பதியின் குழந்தை சிவானந்தம் (5).
தம்பதியர் சிவானந்தத்தை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள மேல்பள்ளம் கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது கொடைக்கானல் மலைச் சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் எதிரே வந்த டிப்பர்லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
அதில், படுகாயமடைந்த ரேகாவும், சிவானந்தமும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.