தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் திருவுருவப்படத்திற்கு டி.ஐ.ஜி மலர் தூவி அஞ்சலி! - கரோனாவால் தலைமைக் காவலர் உயிரிழப்பு

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தலைமை காவலர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து டி.ஐ.ஜி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Virudhunagar DIG Tribute To Police Dead
Virudhunagar DIG Tribute To Police Dead

By

Published : Jul 7, 2020, 3:41 AM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஊர்க்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் அய்யனார்.

இவர் கரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் பேரில் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சேத்தூர் காவல் நிலைய வளாகத்தில் டி.ஐ.ஜி ராஜேந்திரன் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள், ராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர், சரக காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் தலைமைக் காவலர் அய்யனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் கொலை வழக்கு - காவலர்கள் பத்து பேரிடம் சிபிசிஐடி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details