தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சேமித்த பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு அளித்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் - உண்டியல் பணம்

ஈரோடு: இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் புத்தகம் வாங்க இரண்டு உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த பணத்தை, கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் அளித்தனர்.

differently abled children
differently abled children

By

Published : Jun 8, 2020, 9:15 PM IST

ஈரோடு எஸ்கேசி சாலை, அதியமான் வீதியைச் சேர்ந்த காதர்-சரிபா பேகம் தம்பதியரின் இரட்டைக் குழந்தைகள் திருணாஸ் அலி, பஷிகா நிஷா. 16 வயதான இந்தக் குழந்தைகள் இருவருமே மாற்றுத்திறனாளிகள்.

இவர்கள், 2018ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றபோது, அங்கு வழங்கப்பட்ட இரண்டு உண்டியல்களில் பணத்தை சேமித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தகம் வாங்கும் நோக்கத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை, கரோனா நிவாரண நிதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது, “கரோனா பாதிப்பினால் மக்கள் படும் துயரங்களை ஊடகங்கள் வழியாக அறிந்துகொண்ட குழந்தைகள் உண்டியலில் சேமித்த பணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உண்டியல்களை வழங்கினோம். உண்டியல்கள் நிரம்பி இருந்தன, அதில் எவ்வளவு பணம் இருந்தது என பிறகு தெரிவிப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details