நாளை மறுநாள் இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில், தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இறுதி பயிற்சிப் போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொர்டோசா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
வின்டேஜ் தோனி இஸ் பேக்; இந்தியா 359 ரன்கள் குவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழந்து 359 ரன்களை குவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல், தோனி ஆகியோர் சதம் விளாசியதால், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தோனி 113, கே.எல்.ராகுல் 108 ரன்களை விளாசினர். வங்கதேசம் அணி தரப்பில் ரூபல் ஹோசைன், ஷகிப்-உல்-ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணியில் கேள்விக்குறியாக இருந்த நான்காவது வரிசை பிரச்னையை கே.எல்.ராகுல் தீர்த்துவிட்டார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். நான்காவது வரிசையில் களமிறங்கிய அவர், எந்தவித தடுமாற்றமுமின்றி சிறப்பாக பேட்டிங் செய்தார். அதேபோல், ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய தோனி, மிக அதிரடியாக விளையாடி சதம் விளாசி தனது ரசிகர்களுக்கு பழைய வின்டேஜ் தோனியாக காட்சியளித்தார்.