கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பெண்குயின்'. கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்! - பெண்குயின் திரைப்படம்
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட உள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் 2 நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை நாளை பகல் 12 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெண்குயின் படத்தின் மலையாள ட்ரெய்லரை நடிகர் மோகன்லால் வெளியிட, தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் நானி வெளியிடுகிறார்.