இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரைகள் வழங்கும் முகாம் முதல் கட்டமாக செப். 14 முதல் 19ஆம் தேதி வரையிலும் இரண்டாவது கட்டமாக செப். 21 முதல் 26ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இச்சிறப்பு முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள, குழந்தைகள், ஆண்கள், பெண்கள் ஆகியோருக்குகுடற்புழு நீக்கம் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 443 அங்கன்வாடி மையங்கள், 90 அரசு துணை சுகாதார நிலையம், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 573 இடங்களில் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
'பெரம்பலூரில் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் 2 கட்டங்களாக வழங்கப்படும்' - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: மாவட்டத்தில் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகளுக்கு இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியில் 90 மருத்துவ அலுவலர்கள், 88 கிராம சுகாதார செவிலியர், 38 சுகாதார ஆய்வாளர்கள், 32 தன்னார்வலர்கள், 443 அங்கன்வாடி பணியாளர்கள் என 690 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன்மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகள் பயனடைவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.