திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கரோனா பெருந்தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மாவட்டத்தில் நேற்று (ஜூலை 21) மட்டும் 45 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 725ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட துணை ஆட்சியர்! - Dindigul district news
திண்டுக்கல்: மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட துணை ஆட்சியர் ஆயிஷா சிங் நாள்தோறும் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திவருகிறார். இவ்விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று திண்டுக்கல் மாநகராட்சிகுட்பட்ட ஆர்எஸ்ரோடு, ரவுண்டானா, அண்ணாமலையார் பள்ளி சாலை, சந்தைரோடு, நாகல்நகர், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.