தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரூரில் வேளாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்! - ஆடிட்டர் குருமூர்த்தி

கரூர்: வேளாளர் கூட்டமைப்பு சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Demonstration in Karur
கொங்கு வேளாளர்

By

Published : Dec 10, 2020, 12:43 PM IST

கரூர் மாவட்டம் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அனைத்து வேளாளர் கூட்டமைப்பு சார்பில் வேளாளர் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்கு வேளாளர் இளைஞர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் கார்வேந்தன், வ.உ.சி பேரவை கரூர் மாவட்ட தலைவர் மகேஸ்வரன், தமிழ் தேசிய கட்சி கரூர் மாவட்ட செயலாளர் தமிழ் சேரன், அடிட்டர் நல்லுச்சாமி, தலைமையில் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களும் சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேளாளர் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்ததை கண்டித்தும் இதற்கு உறுதுணையாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட ஆதரவளித்த அனைத்து கட்சி தலைவர்களையும் கண்டிக்கும் விதமாக கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கரூர் மாவட்ட அனைத்து வேளாளர் கூட்டமைப்பினர் கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்து தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு அஞ்சல் வழியாக பிரதமர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு வேளாளர் பெயர் பரிந்துரை செய்ததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்களை அனுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details