தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! - திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் : ஆண்டிப்பாளையத்தில் 2019-2020 ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers Protest In Thiruvarur
Farmers Protest In Thiruvarur

By

Published : Sep 27, 2020, 5:43 AM IST

திருவாரூர் மாவட்டம், ஆண்டிப்பாளையம் கடைத்தெருவில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மாசிலாமணி தலைமையில் விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கு உடனடியாக பயிற்க்காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அடியக்கமங்கலம், கருப்பூர், அலிவலம் ஊராட்சிகளுக்குட்ப்பட்ட கிராமங்களில் சுமார் 1200க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயப் பணிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குறுவை காப்பீடு தொகையாக ஏக்கருக்கு 470 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது மூன்று ஊராட்சிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை விடுபட்டுள்ளது.

இதனை உடனே வழங்க வலியுறுத்தி காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் மாநில அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details