தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டம் - cleaning labours protest

திருத்துறைப்பூண்டியில், தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Apr 22, 2021, 6:30 PM IST

Updated : Apr 22, 2021, 7:05 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில், "நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பிஎஃப் தொகையை அனைத்து பணியாளர்களுக்கும் வரும் 24ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும்"

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த பணியாளர்கள் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ள ஈபிஎப் தொடர்பான விவரங்களை உடனடியாக அளிப்பதோடு, ஒப்பந்த பணியாளர்களுக்கு யூனிபார்ம் ஆடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டம்
Last Updated : Apr 22, 2021, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details